(க.விஜி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னேடுக்கப்படும் ஆரோக்கியமான நாட்டை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் மூலம் மண்முனை வடக்கு பிரதேசசெயலகத்தினால் விளையாட்டு உடல்,ஆரோக்கியம் விருத்தி வாரநிகழ்வு இன்று (28.12016)பிரதேசசெயலாளர் வீ.தவராசா தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில்
உதவிபிரதேசசெயலாளர் எஸ்.யோகராசா பிரதேசசெயலகத்தின் நிருவாக உத்தியோகஸ்தர் எஸ்.தில்லைநாதன் (கிராம சேவை உத்தியொகஸ்தருக்கான) பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதன்போது பெண் உத்தியோகஸ்தர்கள் எல்லை விளையாட்டுப்போட்டிகளிலும் ஆண்கள் கிரிக்கட் போட்டிகளிலும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment