(ஆர்.பி.ரோஸன்)
வேதநாயகம் தபேந்திரனின் 'யாழ்ப்பாண நினைவுகள்' பாகம் - 02 நூல் அறிமுக நிகழ்வு நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை யேசுவிட் ஆங்கில கலாசாலையில் 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையினை கலாச்சார உத்தியோகஸ்தர் வி.குணபாலாவும்,
நூலாசிரியர் அறிமுகத்தினை அதிபர் ப.மதிபாலசிங்கமும் வாழ்த்துரைகளை எழுத்தாளர்களான நந்தினி சேவியர்,செல்லிதாசன், திருமதி.பிரகலா சுதர்சன் ஆகியோரும் ஆற்றவுள்ளனர். நூல் மதிப்பீட்டுரையினை உதவித்திட்டப்பணிப்பாளர் ஜனாப்.ஏ.சி.எம்.முஸ்இல் அவர்களும் ஏற்புரையினை நூலாசிரியரும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலக்கியவாதிகள்இ சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்;.
0 Comments:
Post a Comment