(ஆர்.பி.ரோஸன்)
சம்பூர் 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குகராசா தர்சன் எனும் 6 வயதுடைய சிறுவன் திங்கட்கிழமை (25) இரவு பாழடைந்த கிணற்றில் இருந்த சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் இச்சம்பவமானது மீழ் குடியேற்றப்பட்ட ஒருபகுதி சம்பூர் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற இடமானது தற்காலிகமாக சம்பூர் காளிகோவிலுக்கு செல்லும் வீதிக்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்தே சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் இடுப்பில் காலணி நாடா ஒன்றுடன் கல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். மாலை 6.30 மணிவரை சிறுவன் அவர்களது தற்காலிக வீட்டிற்கருகில் விளையாடியுள்ளான். சிறுவனைக் காணாத பெற்றோர்கள் உறவினர்கள் தேடியபோது இரவு 8.00 மணிக்கு சிறுவனின் சடலம் உறவினர்களால் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது மூதூர் கிழக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறுவனின் மரணத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் துரிதமாக கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குகராசாவுக்கு 3 பிள்ளைகள் 3வது மகன் தர்சன் இவ்வாண்டு சேனையூர் மத்திய கல்லூரியில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்ட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment