அம்பாறை பெரியநீலாவணை பிரதேசத்தில் இருந்து தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்குச் சென்று கடந்த வருடம் நடைபெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்த கோவி சசி கஜன் ஆகியோரின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு பெரியநீலாவணை காவேரி விளையாட்டக்கழகம் ஏற்பாடு செய்ய நினைவு தின கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை பெரியநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வெஸ்டன் அணியினரை எதிர்தாடிய காவேரி அணியினர் 36 மேலதிக ஓட்டங்களினால் வெற்றி பெற்று ஞாபகார்த்த கிண்ணத்தினை தட்டிக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment