26 Jan 2016

கட்சி பேதம் இன்றி சகல முரண்பாடுகளையும் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் –கணேசமூர்த்தி.

SHARE
காலத்தினை போல் முரண்பாட்டுடன் செயற்படாமல் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து உங்களுடைய பிரதேசத்தினதும் மக்களினதும் தேவைகளை உணர்ந்து அவற்றினை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு அனைவரும் முன்வாருங்கள். எந்தவித பாகுபாடும் இன்றி என்னால் இயன்ற சகல உதவிகளையும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதியமைச்சரும் இதற்போதையகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றியஅமைச்சின்  விசேட ஆலோசகரும், பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய  சோமசுந்தரம் கணேசமூர்த்திற்கு ஞாயிற்றுக் கிழமை கோயில்போரதீவு மக்களினால் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. விழாவில் சோமசுந்தரம் கணேசமூர்த்தியினால் கடந்த காலங்களில் சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டியதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுத்தியளித்ததுடன், பாடசாலையில் உள்ள வளப்பற்றாக்குறையினையும் பார்வையிட்டிருந்தார். அத்துடன் 2015ம் ஆண்டு பலகலைக்களகத்திற்கு தெரிவான மாணவர்களும் பாராட்டி  கௌரவிக்கப்பட்டிருந்தனர் .

நிகழ்வில் ஐக்கியதேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர், முன்னாள் பிரதியமைச்சரின்  செயலாளர் மற்றும் கோயில்போரதீவினைச்சேர்ந்த ஆலயங்களின் தலைவர்கள், சங்கங்கள், களகங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் அத்துடன்   பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: