3 Jan 2016

களுதாவளை மாணவர்கள் இருவர் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை

SHARE
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் களுதாவளையைச் சேர்ந்த இரு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று களுதாவளைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 
தொழில்நுட்ப பிரிவில் (biosystems) களுதாவளை மகாவித்தியாலய மாணவன் கி.கிருஷ்ணானுரேதன் மாவட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளார். 
கல்முனை பாத்திமா கல்லூரி மாணவன் மயில்வாகனம் சாருஜன் அவர்கள் அம்பாரை மாவட்டத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12வது இடத்தையும் பெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளார்.  இவர் களுதாவளையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: