16 Jan 2016

வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகள் எவரும் வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு முகவர்களாக செயற்படக்கூடாது

SHARE

(ஷர்வின்)

வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகள் கூடுதலான வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு முகவர்களாக செயற்படுவதாக அறிகின்றோம் நிருபிக்கப்பட்டால் எமது திணைக்களத்தினூடாக வழங்கப்பட்டுவரும் சலுகைகள் அனைத்தும் உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாழ்வின் எழுச்சித்திட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான உகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சிதிட்டத்தின் நோக்கம் வறுமையை ஒழித்து சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதேயாகும்.  எமது மாவட்ட மக்கள் வருகின்ற நிவாரணங்கள் எதுவாக இருந்தாலும் பெறுவதையே நோக்காக கொண்டுள்ளனர். இதற்கான காரணம் சுனாமி அனர்த்தத்தின் போது இலவசமாக நிவாரணங்களை பெற்று பழகிவிட்டனர்.

எமது மாவட்டத்தினை பொறுத்தளவில் பல கோடி ரூபாய் பெறுமதியான மானியங்கள் எமது திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றினை சரியாக பயன்படுத்தியதாக இல்லை இதற்காகத்தான் பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு சரியானவர்களை தேர்ந்தெடுத்தால் மாத்திரமே இத் திட்டமானது வெற்றியளிக்கும்.

இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்  வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளுக்கு சுயதொழிலினை மேற்கொள்வதற்காக  74 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மகா சங்கத்தினூடாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகின்றது இருந்தும் கூடுதலான வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களில் இருந்து பயனாளிகள் கடன் பெறுகின்றனர் இதற்கு சில பயனாளிகள் முகவர்களாக செயற்படுகின்றனர். இவர்களை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் உடன் இடைநிறுத்தப்படும் எனத் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: