16 Jan 2016

வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளுக்கு ஐம்பது லெட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு

SHARE
வாழ்வின் எழச்சி வேலைத்திட்டத்தின் கீழ் வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வாழ்வின் எழுச்சித்திட்ட  பயனாளிகளுக்கு சுமார் ஐம்பது லெட்சம் ரூபாய் பெறுமதியான சுயதொழிலுக்கான
உபகரணங்கள் பிரதேச செயலளர் எம்.கொபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சித்திட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம், முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விவசாயம்-48 பேர், கைத்தொழில் 106 போர் என மெத்தமாக 154 பயனாளிகளுக்கு  சுயதொழிலுக்கான உபகரணங்கள் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன. அதுமாத்திரமின்றி 316 பயனாளிகளக்கு சுயதொழில் கடனாக சுமார் 65 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

கிடைக்கின்ற உதவிகளை பயன்படுத்தி வருமானத்தினை ஈட்டும் போதுதான் உண்மையான பயனைப் பெற்றுக் கொள்ள முடியும் இதனை கண்காணிப்பதற்காக எமது உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சுயதொழிலில் ஈடுபடாதவர்கள் இனங்காணப்பட்டால் அவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வேறு நபர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்ப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்…














SHARE

Author: verified_user

0 Comments: