நியூகாசில் அணியுடனான போட்டியில் 3-3 என்ற சமநிலை முடிவைப் பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளரொருவரை, பருத்த உடற்கட்டுடையவர் என, மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முகாமையாளர் லூயிஸ் வான் கால் அழைத்தமை, எதிர்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது.
இந்தப் போட்டியில், வெய்ன் றூணி இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டிக்குப் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில், 'இந்தப் பருவகாலத்தில் வெய்ன் றூணி, அதிகளவிலான விமர்சனத்தைச் சந்தித்துள்ளார்" என ஊடகவியலாளரொருவர் கேட்க, அக்கேள்வியை இடைமறித்த வான் கால், 'வெய்ன் றூணி பற்றி இனிப் பேசப் போவதில்லை.
அவரை நீங்கள் விமர்சித்திருந்திருந்தீர்கள். நான் இல்லை, நீங்கள் தான்" என்றார். அதையடுத்து, அச்சந்திப்பை விட்டு அவர் வெளியேறியிருந்தார். அதன்போது, ஊடகவியலாளர்களில் ஒருவர், 'நீங்களும் தான்" எனத் தெரிவிக்க, வெளியேறும் வாயிலிலிருந்து திரும்பிய வான் கால், 'அங்கிருக்கும் பருத்த மனிதரே, நீங்களும் தான்" என்றார். இது, விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.(tm)
0 Comments:
Post a Comment