10 Dec 2015

ஊழல் என்பது சர்வதேச ரீதியில் எயிட்ஸ் நேயைவிட அதிகமாகப் பரவுகின்றது - என்கிறார் பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம்.

SHARE

ஊழல் என்பது சர்வதேச ரீதியில் எயிட்ஸ் நேயைவிட அதிகமாகப் பரவி வருகின்றது. ஆனால் எமது நாடு ஊழலில் குறைவாக இடத்தில்தான் இருந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் அரசு இலங்கையில் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்நெடுத்து உழல் நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிக்கப் பாடுபட்டு வருகின்றது. என மண்முனை எதன் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு  புதன் கிழமை (09) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.



மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் அரச கடமையிலீடுபடும் அனைவரும் இப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவையினை நல்கி வருகின்றார்கள். இருந்த போதிலும் அரச உத்தியோகஸ்தர்களை மக்கள் சேவைகள் பெறுவதற்றாக நாடி வரும்போது மக்களிடத்தில் அன்பாகவும், பண்பாகவும், விட்டுக் கொடுப்புடனும், மக்களின் தேவைகளை நிறைவேற்றி மக்களை சந்தோசத்துடன் அனுப்ப வேண்டும்.

ஊழல்களுக்கு, பொதுமக்களோ, அல்லது அலுவலக உத்தியோகஸ்தர்களோ காரணமல்ல மூன்றாவது நபர்தான் எங்கிருந்தோ வந்து இடைநடுவில் இதில் அகப்படுகின்றார். அவ்வாறான மூன்றாம் நபர்களை அரச உத்தியோகஸ்தர்கள் இனம்கண்டு அவர்களிடம் சிக்காமல் பொதுமக்களையும் சிக்கலுக்குண்டுபடுத்தாமல் மக்களுக்குத் தேவைலயான உதவிகளை அரச உத்தியோகஸ்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இப்பிரதேசத்திலுள்ளவர்களில் 50 வீதமானவர்கள் வறுமையின் விழிம்பில் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறானவர்களை நாங்கள் தட்டிக்கொடுத்து வறுமையில் வாடுபவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பத்தில் அரச உத்தியோகஸ்த்தர்கள் பின்வாங்கக் கூடாது. எனவே ஊழலற்ற எமது பிரதேசத்தையும், நம் நாட்டையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும், என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: