மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை முகைமை செய்யும், நிருவாகத்தினருக்குத் தேவையான காகிதாதிகள் புதன் கிழமை வழங்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் காலநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியகௌரி, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.எம்.புவிதரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ரி.தயாளன், முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர், திருமத்தி.சீ.அருந்ததி, மற்றும், சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை முகாமை செய்யும், நிருவாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் இயங்குகின்ற சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள் சுயமாக இயங்கும்முகமாக இன்றயத்தினம் அவர்களை முகாமை செய்யும் நிருவாகத்தினரிடம் அவர்களுக்குத் தேவையான கடிதத்தலைப்பு, இறப்பர் முத்திரை, அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட காதிதாதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்திலுள்ள 45 சிறுவர் அபிவிருத்திக் குழுக்களில் தெரிவு செய்யப்பட்ட 35 சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கு இக்காகதிதாதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், மற்றும், தேவைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள கடிதத்தலைப்புக்களுடாக நிருவாகத்தினர் என்மை அனுக முடியும் என சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.எம்.புவிதரன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment