மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்ட இன்று வியாழக் கிழமை (10) மட்டக்களப்பு சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றது. கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் கோறளைப் பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்நடமாடும்சேவை இடம்பெற்றது.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பு, எஸ்கோ நிறுவனம், ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளல், கடவுட்சீட்டுக்கு விண்ணப்பித்தல், பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகள் என்பன போன்ற பல விடையங்களை பொதுமக்கள்; கோறளைப்பற்று பிரதேச பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிரஜைள் சபையின்; தலைவர் க.நடராஜன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ரி.தினேஸ், எஸ்கோ நிறுவன திட்ட முகாமையாளர் எஸ்.சுரேன்திரன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்ததாக கிராமிய அபிவிருத்தித் திட்டமிடல் அமைப்பின் திட்ட முகாமையாளர் வ.றமேஸ்ஆனந்தன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment