24 Dec 2015

தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து கொண்டுவந்த இந்த நல்லாட்சியில் மக்கள் தற்போது நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றார்கள்

SHARE
கடந்த அரசாங்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வந்தார்கள், இந்நிலையில், தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து கொண்டுவந்த இந்த நல்லாட்சியில் மக்கள் தற்போது நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றார்கள் என கிழக்கு மாகண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரை வைத்தயிசாலையில் இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்ற வருhடாந்த பரிசழிப்பு விழாவின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி ஆதாரை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம், மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தயசாலை நலம்புரிச் சங்கத்தினர் எனலப் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஜெய்க்காத் திடத்தினூடாக 429 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு தற்போது கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வைத்தியசாலை எதிர் காலத்தில் நவீனத்துவமான முறையில் கொண்டு செல்லப்படக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

இந்த மாகாணத்தின் சுகாதார அமைச்சராகிய எனக்கு இந்த கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளைகப் பூர்தி செய்ய வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது அந்த வகையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் அனைத்தையும், எதிர் காலத்தில் பூர்தி செய்வதோடு இவ்வைத்தியசாலையை கிழக்கு மாகாண பொது வைத்தியசாலையாகவும் தரமுயர்த்த இன்றிலிருந்து நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அம்பறை வைத்தியசாலையில் 23 தாத்தியர்கள் மேலதிகமாக இருக்கின்றார்கள், கல்முனை வைத்தியசாலையில் 23 தாதியர்கள் மேலதிகமாக இருக்கின்றார்கள், மட்டக்களப்பிலே 50 தாதியர்கள் குறைபாடாக இருக்கின்றது. திருகோணமலையிலே 27 தாதியர்கள் தேவைப்படுகின்ற நிலையில்,  புதன் கிழமை (23) மட்டக்களப்புக்கு 17 தாதியர்களும், திருகோணமலையில் 14 தாதியர்களையும், நியமித்திருக்கின்றோம்.

இதுபோல் பொத்துவில் வைத்தியசாலைக்கு தாதியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. அம்பாறையிலே சிங்கள பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தாதியர்கள் நியமிக்கவில்லை என தாதியர்கள் யூனியன் ஆர்ப்பாட்டம் எடுக்கும் நிலமைக்கு வந்துள்ளது. எனவே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிய நான் பாரியதொரு சிக்கலுக்குள் உள்ளாகியிருக்கின்றேன். 

எனவே எதிர் வருகின்ற பெப்வரி மாதமளவில் புதிய தாதியர்களும், புதிய வைத்தியசர்களும், வர இருக்கின்றார்கள் அப்போது இங்குள்ள வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படும், 

130000 இற்கு மேற்பட்ட மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசம் 30 ஆண்டுகாலமாக பல இன்னல்களை எதிர் கொண்டு வந்த இப்பிரதேச மக்களுக்கு, சிறந்த வைத்திய தேவையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். 

கடந்த அரசாங்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வந்தார்கள், இந்நிலையில், தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து கொண்டுவந்த இந்த நல்லாட்சியில் மக்கள் தற்போது நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றார்கள் என கிழக்கு மாகண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: