மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையில் இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்றது.
2014 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன்போட்டியில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றிருந்தது. கடந்த காலங்களில் மிகவும் கீழ் மட்டத்தில் இருந்த இவ்வைத்தியசாலையை டாக்டர் கு.சுகுணன் வைத்திய அத்தியட்டசகராக பொறுப்பேற்றதன் பின்னர் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி வைத்திய அத்தியட்சகரின் தலைமைத்துவத்தின் கீழ் இவ்வைத்தியசாலை மிகவும் திறம்பட மக்களுக்குச் சேவை செய்துவருகின்றதோடு இச்சேவையின் நிமிர்த்தம். 2014 ஆம் ஆண்டுக்குரிய தேசிய உற்பத்தி திறன்போட்டியிலும் இரண்டாம் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.
இவ்விருத்தினைப் பெற்றுக்கொண்டமைக்கான இன்று இவ்வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அரசியல் வாதிகளும். அதிகாரிகளும், பொதுமக்களும், பெரும் பாராட்டுக்களை டாக்டர் கு.சுகுணனுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை ( வெள்ளிமைல), கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தினர் எனலப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வருடம் நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன்போட்டியில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றமைக்காக வைத்தியசாலை நிருவாகத்தினரால் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தல்களுக்கு சான்றிதகள் வழங்கப்பட்டதோடு இவற்றுக்கு ஒத்தாசை புரிந்த அதிகாரிகளுக்கு ஞாபகச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்களால் கலை நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment