24 Dec 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு வரவேற்பு

SHARE

(இ.சுதா)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர், மாகாணசபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மகிழூர் முனை ஸ்ரீ மண்டபத்தடி வலம்புரி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.கிருபைராசா தலைமையில் நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் ச.வியாழேந்திரன், இகிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன் மா.நடராசா இரா.துரைரெட்ணம் ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் உட்பட கிராம சேவகர் உத்தியோகஸ்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மகிழூர்முனை 110வி கிராமப் பொது மக்களினால் அதிதிகள் பொன்னாடை போத்திக் கௌரவிக்கப்பட்டதுடன் அறநெறி மாணவர்களின் கலை கலாசார விழுமியங்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: