24 Dec 2015

தேவைகளைப் பூர்தி செய்வது தொடர்பில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டு முடிவெடுக்க வேண்டும்

SHARE

எமக்குள்ள தேவைகளைப் பூர்தி செய்வது தொடர்பில், முஸ்லிம்களும், தமிழர்களும், ஒன்றுபட்டு முடிவெடுக்க வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளோம்.


என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் வருடமாந்த பரிசழிப்பு விழா புதன் கிழமை (23) மாலை  களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி பாலர் பாடசாலையின் பெற்றார் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், முன்பிள்ளைப் பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனசுந்தனம், இப்பிரதேச முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர், திருமத்தி.சீ.அருந்ததி உட்பட பால் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது அசர் மேலும் குறிப்பிடுகையில்…


எதிர் வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெற வைத்துத் தாருங்கள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற 50 வீதமான தேவைகளை நிறைவேற்றித் தருகின்றோம். 

கட்சி என்பது மதமோ, கோயிலோ அல்ல கட்சி என்பது எமது எதிர் கால தேவைகளைப் பூர்தி செய்வதற்கு உரிய இயக்கம்தான் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரு கழகம்தான் கட்சியாகும். 

தமிழர்களிடத்திலும், முஸ்லிம்களிடத்திலும், தற்போதும்கூட ஒவ்வாமைகள் சென்று கொண்டிருக்கின்றன. எனவே எமது இரு சமூகத்தையும், பிரித்தாளும் விடையத்தை இந்த தமிழ் சமூகம் அங்கிகரிக்கும் என்று சொன்னால் தமிழர்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை புள்ளடியிடுமுகின்ற இயந்திரமாகத்தான் இருக்கமுடியும். இவ்வாறு இருந்தால் நாங்கள் ஆட்சியிலிருக்கின்றோம், பங்காளியாக இருக்கின்றோம், என்று சொல்வதில் எதுவித அர்தமும் கிடையாது. 

எனவே எமக்குள்ள தேவைகளைப் பூர்தி செய்வது தொடர்பில்,  முஸ்லிம்களும், தமிழர்களும், ஒன்றுபட்டு முடிவெடுக்க வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளோம்.

வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகளின் படிப்பை இடை நடுவில் நிறுத்தி விடாத்தீர்கள், குடிபோதையில் முதலிடத்தில் இருக்கின்ற மாவட்டம் மட்டக்களப்பு மாவமட்டமாகத் திகழ்கின்றது. எனவே தேசிய ரீதியில் கேவலமான பெயரை நாங்கள், பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

முஸ்லிம் சமூகம், சேமித்துச், சேமித்து அவர்களது பிள்ளைகளை நன்கு கற்பித்து, பல மாடிக் கட்டடங்களையும், கட்டிக்கொண்டு வளர்ச்சியடைகின்றார்கள், ஆனால் தமிழ் மக்கள் 1000 ரூபாய் உழைத்தால் 600 ரூபாவை மதுவுக்காகச் செலவு செய்கின்றார்கள், மிகுதி 400 ரூபாவில் என்ன செய்ய முடியும், முஸ்லிம் சமூகத்தால் முன்னேற முடியும் என்றால் அது ஏன் அது தமிழ் சமூகத்தால் முடியாது என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்திக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.  

SHARE

Author: verified_user

0 Comments: