நபிகள் நாயகத்தின் போதனைகள் முழு உலகிற்கும் பொதுவானது.பிரதி அமைச்சர் அமீர் அலி தனது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்
நபிகள் நாயகத்தின் போதனைகளும்இநற்பண்புகளும் முழு உலகிற்கும் பொதுவானதுஇ என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி தனது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
முழு உலகிற்கும் அருற்கொடையாகவும் வழிகாட்டியாகவும் எல்லாம்வல்ல இறைவனால் அனுப்பப்பட நபிகள் நாயகத்தின் வாழ்க்கையானது எல்லா இனத்திற்கும் எல்லா மதத்திற்கும் பொதுவானவையாகும் அவற்றை பின்பற்றுவதன் மூலம் முழு உலகும் சமாதானத்தை நுகரமுடியும் அறிவியல் அரசியல் இன்மீகம் பொருளியல் பெளதீகவியல் நிதியியல்இநீதியியல் என்று எல்லாத்துறையிலும் மிகச்சிறந்த முன்மாதிரிகளை இந்த உலகுக்கு தந்த ஒரு ஆன்மீகத்தலைவராகவும்இஅரசியல் வித்தகராகவும் அவர் வாழ்ந்து காட்டினார்.
நபிகளாரின் நற்பண்புகளும்இநன்நடைத்தையும் நமது அன்றாட வாழ்விலுக்கான மிகச்சிறந்த முன் உதாரணங்களை கொண்டுள்ளதாகும். அவற்றை முழு உலகும் பின்பற்றுமானால் உலகம் எதிர்பார்க்கின்ற சமாதானமும்இஅமைதியும் இலகுவில் கிடைக்கும் நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கையும் மனித இனம் முழுவதற்குமான சிறந்த வழிகாட்டல்களைக் கொண்டதாகும் விட்டுக்கொடுப்பும்இமனித நேயமும் அவரது வாழ்க்கை முழுக்க நிரம்பிக் காணப்பட்டது சக மனிதனை மதிக்கின்ற உயர்ந்த பண்பும் எளிமையான வாழ்வியல் நடத்தையும் உலகத் தலைவர்கள் வரிசையில் அவருக்கு முதலிடத்தை வழங்கி நிற்கின்றது எனவே நபிகள் நாயகம் அவர்கள் காட்டித்தந்த முன்மாதிரிகளை பின்பற்றி வாழ்வதோடு சர்வதேசத்திலும்இதேசியத்திலும் சமாதானமும் அமைதியும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்போம் என்று கூறினார்.
0 Comments:
Post a Comment