24 Dec 2015

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசழிப்பு விழா

SHARE
 மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசழிப்பு விழா புதன் கிழமை (23) மாலை  களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் பெற்றார் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி,  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், முன்பிள்ளைப் பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனசுந்தனம், இப்பிரதேச முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர், திருமத்தி.சீ.அருந்ததி உட்பட பால் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின்போது மாணவர்களின் பல கலை நிகழ்வுகளும், இடம்பெற்றதோடு, அடுத்த வருடம் முதலாம் ஆண்டுக்குச் செல்லவிருக்கின்ற மாணவர்களுக்கு, பரிசில்களும், வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.  





























SHARE

Author: verified_user

0 Comments: