திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் இழுபறி நிலையில் காணப்பட்ட இவ்விடயம் காரணமாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தை நடாத்த முடியாமல் இருந்தது.
தமக்கு கிடைத்த இப்பதவி மூலம் மூவின மக்களும் சேவையாற்றி திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment