ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (14) திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு மாகாண விவசாய அமைச்சில் நடைபெற்றது.
தேசிய உணவுற்பத்தி வேலைத்திட்டத்திற்கமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களின் சார்பு ரீதியிலான பங்களிப்பு மற்றும் இத்திட்டத்தினை வினைத்திறன் உடைய வகையில் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
மூன்றாண்டு திட்டமாக வகுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின ஊடாக நாட்டுக்கு தேவையான உணவுற்பத்தியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 Comments:
Post a Comment