தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை சம்பவத்துக்கும் எனக்கும் எனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதை கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாகஇ கிறிஸ்தவ மக்கள் நன்கறிவார்கள்.
கிழக்கு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நான் நிரபராதியாக வெளியில் வருவேன் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன் கிழமை ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில்இ நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும் போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் '2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இருந்தபோதிலும் இக்கொலைச் சம்பவத்துக்கும் எனக்கும் எனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதை கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் நன்கறிவார்கள். கிழக்கு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நான் நிரபராதியாக வெளியில் வருவேன் என்றார்
0 Comments:
Post a Comment