மட்டக்களப்பு மண்டூர் வெள்ளைப்பாலத்தில் தற்போது திருத்தவேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அவ்விடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீதியினூடாக மக்கள் போக்குவரத்தில் பலத்த சிரமத்தை எதிர் கொண்டு வருவதாக விசனம், தெரிவிக்கின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கில் இப்பாலம், திடீரென உடைந்து விழுந்திருந்தது.
இந்த பாலத்தின் திருத்த வேலைகள் தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்நிலையில் இக்காலப் பகுதியில் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலம் ஆகையால் இதன் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது, பெருத்தமற்றது எனவும் அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இப்பாலதின், திருத்தவேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ள போதும் மக்களின் போக்குவரத்திற்காக அவ்விடத்தில், தற்காலிகமாக அமைக்கப் பட்டுள்ள வீதியினூடாக போக்குவரத்தில் மக்கள்; பாரிய சிரமங்களை ஏதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையினால் இந்த தற்காலிக வீதியும் முற்றாக பாரிய சேதமடைந்துள்ளது. இவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பாரிய விபத்துக்களை எதிர் நேக்கக்கூடிய நிலமை காணப்படுவதோடு, பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அன்றாட தொழிலுக்காக செல்லும் மக்களும், மிகுந்த இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றமை எடுத்துக் காட்டத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment