16 Dec 2015

கிழக்கில் முதலீடு செய்யுங்கள் எனும் தொனிப்பொருளில் மாபெரும் முதலீட்டாளர் மாநாடு கொழும்பில்

SHARE
கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 28 ஆம் திகதி " கிழக்கில் முதலீடு செய்யுங்கள்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் முதலீட்டாளர் மாநாடு கொழும்பில் கலதாரி ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாகவும்
 இதன் மூலமாக கிழக்கு மாகாணத்தினை சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்ட மாகாணமாக கட்டி எழுப்புவதே எனது நோக்கமாக உள்ளதால் உங்களாலான முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் செனனிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்

திருகோணமலை அலஸ் தோட்டத்தில் உள்ள அமராந்தி பே ஹோட்டலில் செவ்வாய் கிழமை ( 15) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் நிலையினை பற்றி கூறும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். இதன் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்

இம்மாகாணம் விவசாயத்துறையை அடிப்படையாக கொண்டுள்ளதால் இத்துறையினை அபிவிருத்தி செய்வதில் பாரிய பங்குள்ளதாகவும்  கிழக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சிக்கும் சுகாதார சேவையினை விஸ்தரிப்பதற்கும்  வேலையில்லா திண்டாட்டத்திற்க்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும்  கிழக்கு மாகாணத்தில் இருந்து பணிப் பெண்களாக வெளிநாடு சென்று கஷ்டப்படும் நிலையினை மாற்றி சொந்த நாட்டிலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுத்து வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானத்தினை ஈட்டக் கூடியவாறு புதிய திட்டங்களை உருவாக்குவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியதோடு இன மத கட்சி பேதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணம் ஒரு சிறந்த ஆட்சியினை நடாத்தி வருகின்றது .

இதனால் எந்த ஒரு வேலைத்திட்டத்தினை செய்வதாக இருந்தாலும் எந்த விதமான பாரபட்சமும் இன்றி சமமாக பகிரப்பட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வும் எட்டப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 28 ஆம் திகதி " கிழக்கில் முதலீடு செய்யுங்கள்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் முதலீட்டாளர் மாநாடு கொழும்பில் கலதாரி ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாகவும்இ  இதன் மூலமாக கிழக்கு மாகாணத்தினை சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்ட மாகாணமாக கட்டி எழுப்புவதே எனது நோக்கமாக உள்ளதால் உங்களாலான முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் செனனிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார் .

இந்நிலையில் சுமார் 60 வருடங்களாக இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது . கடந்த 60 வருடங்களாக உதவியது போன்று தொடர்ந்தும் கவனம் செலுத்தவுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் செனன் கூறினார் .








SHARE

Author: verified_user

0 Comments: