ஆசிரியர்களின் நலன்களுக்காக போராடுகின்ற சங்கங்கள் அரசியல் சாயம் பூசப்படக் கூடாது. அச்சங்கங்களில், பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்துகொண்டு சுயலாபம் கருதி சங்கத்தை விற்று அரசியலில் ஈடுபடுபவர்கள் எதிர் காலங்களில் சங்கத்தை மாசு படுத்தாமல் உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இப்படியான பச்சோந்திகளை பூனிதமான ஆசிரியர் பணியினை மேற்கொள்கின்ற ஆசிரியர்களின் சங்கங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம், தலைநிமிர்ந்து சேவை செய்யும் எம்மை அரசியல் சாயம் பூசி இன்னொருவரிடம் தலைகுனிய வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் இவ்வாறானவர்களை ஆசிரியர்கள், ஒரு போதும் சங்கங்களில், செயற்படுவதற்கு இடமளிக்க கூடாது எனவும் ஆசிரியர்கள் வேண்டி நிற்கின்றனர்.

0 Comments:
Post a Comment