2 Dec 2015

கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப் படுத்துமாறு பொது மக்களுக்கு பிரதேச சபை வேண்டுகோள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளை இன்று புதன் கிழமை (02) முதல் அவற்றின் உரிமையாளர்கள் கட்டிப் பாதுகாப்பாக வளர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் இன்று புதன் கிழமை (02) தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் கட்டாக்காரியாகத் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மேற்படி பிரதேச சபை எடுத்துள்ள நடவடிக்கை என்வென கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயில்...

தமது பிரதேசபை எல்லைக்குட்பட்ட பழுகாமம், கோவில்போரதீவு, முனைத்தீவு;, பெரியபோரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, மண்டூர், போன்ற பகுதிகளில் இரவு வேளைகளில் பல மாடுகள் கட்டாக்காலியாகத் திரிகின்றன. இவற்றால் வீதிவிபத்துக்கள், இடம்பெறுவதோடு, பிரயாணிகளும், பொது மக்களும், பலத்த அளொகரியங்களையும், எதிர்கொண்டு வருகின்றனர்.

இவற்றினைக் கருத்தில் கொண்டு இப்பிரதேசத்திற்குட்டபட்ட மேற்படி கிராமங்களுக்கு தமது பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் நேரடியாகச் இன்றயதினம் சென்று ஒலிபெருக்கி மூலம் கட்டாகாகலியாகத் திரியும், மாடுகளைக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றயத்தினம் தாம் தெரிவிக்கும், பொது அறிவித்தலை பொதுமக்கள் பின்பற்றாது மேலும் அவர்களது மாடுகள் வீதிகளில் கட்டாக்காலியாக நடமாடுவதைக் கண்டால் அவற்றினைப் பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போரதீவுப்பறு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: