17 Dec 2015

மட்டக்களப்பில் சுவரொட்டிகள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பெயரால் அரசுக்கெதிராக காரசாரமான தொனியில் அமைந்த வாசகங்களுடன் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில்” பாதிப் பதில் வேண்டாம்- சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்” “கூட்டரசாங்கம் பென்ஷனுக்கு வேட்டு, ஈபிஎப், ஈரிஎப் ஐ கொள்ளையடிக்கிறது
உரமானியம் நாசம் அரசாங்கத்தின் குண்டில் சிக்காதிருப்போம்” “சகல காணாமலாக்குதல்களையும் வெளிப்படுத்து” “பைக் -த்ரீவீல் வாகனங்களுக்கு விதித்த வரியைச் சுருட்டிக் கொள்” “குமார் குணரெத்தினத்தை நாடு கடத்தாதே உடன் விடுதலை செய்”
போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்பட்டுள்ளன.
SHARE

Author: verified_user

0 Comments: