பிள்ளைகளிடம் நற்பண்பையும் நல்லொழுக் கங்களையும் விதைப்பதற்கான சிறந்த பருவம் முன்பள்ளிப் பருவமாகும். இன்று திறமை காட்டும் இந்தப் பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதலையும் மார்க்கக் கல்வியையும் வழங்குவது பெற்றோர்களின் கட்டாயக் கடமையாகும் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
இன்று ( 20) ஞாயிற்றுக் கிழமை ஓட்டமாவடி, மீராவோடை உதுமான் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரைநிகழ்துகையில்
நற்பண்பும்இநல்லொழுக்கமும் உள்ள நல்ல சமூகத்தை உருவாக்கும் நல்ல தளமாக முன்பள்ளிகளை கொள்ள முடியும் இந்த சின்னச் சிறுசுகளின் இந்தப் பருவமானது எதனையும் இலகுவில் உள்வாங்கி பதித்துக் கொள்ளக்கூடிய பருவமாகும் அதனை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிகச்சிறந்த ஆளுமை உடையவர்களாக இவர்களை ஆக்குவதற்கான அடித்தளம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது இதனை பெற்றோர்களை உணர்ந்து செயற்பட வேண்டும்.
இந்த வயது அழுக்கற்ற தூய்மையான எண்ணங்களை மட்டுமே சுமந்த வயதாகும்இ எந்தவிதமான தீய செயற்பாடுகளினாலும் தாக்கத்திற்கு உள்ளாகாத வயதாகும்இஇந்தக்குந்தைகள் வெள்ளைக் காகிதங்களை ஒத்தவர்கள் இவர்களை சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்த்துள்ள பிரஜைகளாக மாற்றும் ஆரம்ப கட்டப் பொறுப்பு முன்பள்ளிகளிடமும் அக்குழந்தைகளின் பெற்றோர்களிடமும் மட்டுமே காணப்படுகின்றது அதை அவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறான வருடாந்த பரிசளிப்பு விழாக்கள் மூலம் மாணவர்கள் உற்சாகம் அடைகிறார்கள்இஅவர்களை தட்டிக்கொடுத்து இன்னும் அவர்கள் சாதனை படைக்க இந்த பரிசளிப்பு விழாக்கள் உதவுகின்றன என்று கூறினார். இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment