மட்டக்ளப்பு மாவட்டம் பட்டிருப்பிலிருந்து பழுகாமம் நோக்கிச் செல்லும், பிரதான வீதி மிக நீண்ட காலமாக பழுதடைந்து கிடைக்கின்றன. இந்நிலையில், இவ்வீதியின் புணரமைப்பு வேலைகள் தற்போது இடம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
இந்த புணரமைப்பு வேலைகள் முறையற்ற விதத்தில் இடம்பெறுவதாக அப்பகுதிவாழ் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வீதியிலுள்ள பள்ளங்களுக்கும், குழிகளுக்கும் கற்களைப் போட்டுதார் இட்டு செப்பனிடும் போது முறையற்ற விதத்திலும் மழைபெய்து ஓய்ந்தவுடன் தார் இடுவதாகவும் இச்சம்பவத்தை நேரில் அவதானித்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செப்பனிடப்படும் பள்ளங்கள் மற்றும், குழிகள் ஒழுங்கற்ற முறையில் நிரப்பப்படுவதாகவும், அப்பள்ளங்கள் சீர்செய்யாமல் ஒழுங்காக அதனுள் அமிழ்ந்திருக்கும், மண், தூசிகள் அகற்றாமல் ஈரலிப்புடன் கற்கள்; இட்டு தார் ஊற்றுவதனால் அது உறுதியாக அமையாததன் காரணமாகத்தான் பார ஊர்திகள் செல்லும் போது அவை மீண்டும் சிதைவடைவதாகவும், அப்பகுதி மக்;;ள கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment