கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு எமது மாகாண சபை நிதியீட்டத்துடனான நிகழ்ச்சி திட்டங்களிற்கு மேலதிகமாக மத்திய அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் எமது மாகாண நோக்குடன் ஒன்றினைந்தமையாக தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற அதே வேளை மாகாண சபை நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தபடும்
வெளிநாட்டு நிதியுதவியுடனான விசேட கருத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என நான் நம்புகின்றேன் .
என கிழக்கு மாகாண மதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். திங்கட் கிழமை (21) கிழக்கு மாகாணத்திற்கான வரவு செலவு திட்டத்தை மாகாணசபை அமர்பில் முன்வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
அண்மைக்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வெளிநாட்டு நிதியுதவியுடனான விசேட திட்டங்களில் அநேகமானவை இவ்வாண்டில் முடிவுறுத்தப்பட்டுள்ளமையால் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது அடுத்த வருடத்திற்கான விசேட கருத்திட்டங்கள் குறைவாகவே காணப்படுகின்றன . புதிய கருத்திட்டங்கள் மற்றும் வருமானத்தை உழைக்க கூடிய நிறுவனங்களை உருவாக்கி செயற்படுத்துதல் என்பவற்றிற்கான நிதியீட்டங்களை தேடிப்பெறவேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. .
சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ( 2nd HSDP) 2016 ஆம் ஆண்டில் 365 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதனையும் தற்போது உலக வங்கி அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கும் பாடசாலைக் கல்வி அபிவிருத்தித் திட்டத்திற்கென 495 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிதியுதவியுடன் அடிப்படை சமூகசேவை உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்கென 95 மில்லியன் ரூபாவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர்களுக்கான அவசர நிதியத்தின் (UNICEF ) கீழ் 15 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது . என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment