13 Dec 2015

யுத்தம் நடைபெற்று முடிந்த நிலையிலும் 13 வது திருத்தச்சட்டம் இன்னுமே நடைமுறைப் படுத்தப் படாமலிருக்கின்றது.

SHARE
மாகாண சபைகளினாலும், உளுராட்சி மன்றங்களினாலும், மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களை மேற்பார்வை செய்கின்ற செயற்பாட்டு மத்திய அரசின் கீழ் இருக்கின்ற மாகாணசபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சாக இருந்தல் மாகாணசபை என்பது எதற்கு இருக்கின்றது. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் கணணி மயப்படுத்தப்பட்ட உசாத்துணைப் பகுதி சனிக் கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

மாகாண சபைகளினாலும், உளுராட்சி மன்றங்களினாலும், மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களை மேற்பார்வை செய்கின்ற செயற்பாடுகளையும், கண்காணிக்கின்ற பொறுப்புக்களையும், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினது என மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர்கள் மேற்படி விடையங்கள் தொடர்பில் நாங்களும். நன்கு அறிந்வர்கள் என்பதை தெரிந்து கொண்டு செயற்பட வேண்டும். 

இந்த நாட்டிலே யுத்தம் நடைபெற்று முடிந்த நிலையிலும், 13 வது திருத்தச்சட்டம் இன்னுமே நடைமுறைப் படுத்தப்படாமலிருக்கும் இச்சந்தப்பத்தில் இவ்வாறான சதித்திட்டங்களைக் எடுக்கக் கூடாது, மீண்டும் நாட்டைச் சீரழிக்கின்ற நிலமைக்கு யாரும் துணைபோகக்கூடாது. ஆனாலும் இந்த நாட்டிலே அரசியல் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என ஜனாதிபதி மிகவும் தெழிவாக இருக்கின்றார். 

நாங்கள் எமது மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் மிகவும் துரிதமாகச் செயற்பட்டு வருகின்றோம், மத்திய அரசாங்கத்திலுள்ள அமைச்சரிகளிடம் நாங்கள், கேட்டுகும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாமல் உள்ளது. இதனையிட்டு நாம் பரிதாபம் அடைகின்றோம். 

எனவே அதிபாரப் பகிர்வு அரசியல் அதிகாரப்பகிர்வாகப் போகும் அதே சந்தர்ப்பத்திலே முதலீடுகளும், நிதி ஒதுக்கீடுகளும் மாகாணசபைகளுக்கு ஒரேநேரத்தில் பகிரப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போதுதான் இந்த நாட்டிலே உண்மையான அதிகாரப் பகிர்வு இடம்பெறும் அதுவே நியாயமான அதிகாரப் பகிர்வாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: