மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளான விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கட் கிழமை (05) வித்தியாலய காட்மண்ட் மண்டபத்தில் அதிபர் ஜே.ஆர்பி.விமஸ்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய மாணவர்கள் ஒழுக்கவுள்ள மாணவர்களாகவும் பண்புள்ள மாணவர்களாகவும் திகழும்போது மெதடிஸ்த மத்திய கல்லூரி நல்ல புத்திஜீவிகளை அறுவடை செய்யும். எனவே ஒவ்வொரு மாணவர்களும் நேர முகாமைத்துவத்துடனும் சுகாதார பழக்கமுள்ள மாணவர்களாகவும் பாடசாலைக்கு வருகை தந்து ஆசிரியர்களை சொல்லும் விடயங்களையும் கற்பித்த விடயங்களையும் கற்றுக்கொண்டு எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்து சமூகம் எதிர்பார்க்கும் நற்பிரஜை எனும் அறுவடையை வழங்க வேண்டும் என மட்.மாவடிவேம்பு வைத்திய அதிகாரியும் மெதடிஸ்டி மத்திய கல்லூரி பழைய மாணவருமாகிய வைத்தியகலாநிதி கே.மௌலீசன் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கல்லூரியின் பிரதி அதிபர்களான பயஸ் ஆனந்தராஜா, ஆர்.பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் கல்வி கற்ற பலர் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களும் இன்னும் பல உயர் பதவிகளை வகிப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment