10 Oct 2015

பிரச்சினைக்குரிய யானைகளைப் பிடித்து ஹபரணைக்காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கான வேலைகள் ஆரம்பம்.

SHARE
வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள பிரச்சினைக்குரிய யானைகளை ஹபரணைக்காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கான வேலைகளை வனவிலங்கு பரிபாலனத்திணைக்களத்தின் வைத்தியர்கள் வியாழக்கிழமை (08) வெல்லாவெளியில் ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் இடம்பெற்றுவரும் யானைகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையில் நிரந்தரமான தீர்வை எட்டுவதநற்காக மாவட்ட அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட செயற்பாட்டின் ஒருபகுதியான யானைகளை வேறு பிரதேசத்திற்குக் கொண்டு செல்லுதல் நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
கடந்த திங்கட்கிழமை (05) போரதீவு பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இப்பிரதேசக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களைச் சந்தித்த அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பத்து நாட்களுக்குள் பிரச்சினைக்குரிய யானைகளை வேறு இடத்திற்கு அகற்றுவது என்றும், அதுவரையில் பாதுகாப்புப்படையினரையும் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தினருடன் சேவையில் ஈடுபடுத்துவது என்றும், அதே நேரத்தில் யானைகள் தங்கி நிற்கும் பற்றைக் காடுகளை துப்பரவு செய்வது என்றும் முடிவுகளை அறிவித்திருந்தார்.

அதன்படி காடுகள் தூப்பரவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் வியாழக் கிழமை (08) வைத்தியர்கள் அடங்கிய குழு மட்டக்களப்புக்கு வருகை தந்து யானைகளை பிடித்துச் செல்வதற்கான வெலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் இந்த யானைகளை அகற்றுவார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட வன விலங்கு பரிபாலனத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: