கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபைப் பகுதிகளிலும் எங்கெல்லாம் மழை வெள்ளம் வரும் அபாயம் இருக்கிறதோஇ எங்கெல்லாம் வடிகான்கள் துப்பரவின்றிக் காணப்படுகிறதோஇ மழை நீர் வடிந்தோடக் கூடிய வளிவகைகளை உடனடியாக மழைக்கு முன்னர் ஏற்பாடு செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உத்தரவிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
மிகவிரைவில் கிழக்கின் பல பாகங்களிலும் வடிகான்கள் அமைக்கும் பணிகள் இடம்பெறும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. ஆனால் மாரி மழை பெய்து அதனால் பொதுமக்களின் இருப்பிடம்இ வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்காமல் உடனடியாக மழை வெள்ள நீர் தேங்கிநிற்காது வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக செய்யவேண்டும்.
ஒவ்வொரு முறையும் வெள்ளம் வந்த பின்னர் வாகனங்களைத் தேடித்திரிவதை விட வெள்ளம் வருமுன்னர் அதற்க்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்தால் பொதுமக்களுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது.
எனவே ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றச் செயலாளர்களும் தங்களது கடமைகளாக இதனை ஏற்று உடனடியாக வடிகான்களைத் துப்பரவு செய்யவும்இ பாதைகளைச் சீர் செய்யவும்இ நீர் வடிந்தோடும் இடங்களைச் சரிசெய்யும் நடவடிக்கையினையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பணித்துள்ளார்.
0 Comments:
Post a Comment