சம்மாந்துறை மஜீட்புரத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நேற்று (18.10.2015) மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டடன.
இதனடிப்படையில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தனித்து விடப்பட்ட மற்றும் பின்தங்கிய 10 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட பல்தேவைக் கட்டிடம், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட பாடசாலை மத்திய வீதிக்கான மதகு மற்றும் வடிகான் என்பன மக்கள் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டன.
இதன்போது மஜீட்புரம் ஜூம்மா பள்ளிவாசல் புனரமைப்பிற்கான காசோலை,ஹூஸ்னுல் மாஆ பவுண்டேசன் அமைப்பிற்கான தளபாடங்கள் என்பனவும் கையளிக்கப்பட்டன.
இதன்போது மஜீட்புரம் ஜூம்மா பள்ளிவாசல் புனரமைப்பிற்கான காசோலை,ஹூஸ்னுல் மாஆ பவுண்டேசன் அமைப்பிற்கான தளபாடங்கள் என்பனவும் கையளிக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.அன்வர், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கே.அருந்தவராஜா, உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் தலைவர்கள்இ கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment