அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனுடனான இன்றைய (வியாழக்கிழமை 08) சந்திப்பின் போது, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கீழ் வரும் தேசிய கண்ணி வெடியகற்றல் குழுவிற்கு (Nஆயுஊ) சர்வதேச மற்றும் உள்ளக பங்காளர்களின் நிலக்கண்ணி
வெடியகற்றல் நடவடிக்கைகளுக்கு 1.745 மில்லியன் (இலங்கை ரூபாயில் 245 மில்லியன்) அமெரிக்க டொலர்கள் மேலதிக உதவியை அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்; அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனிடம், அறிவித்தார். மொத்தமாக, 1993 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணி வெடியகற்றல் உதவிக்காக அமெரிக்காவானது 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாயில் 6 பில்லியன்) வழங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டளவில் கண்ணி வெடியற்ற நாடாக இலங்கையை மாற்றும் அமைச்சர் சுவாமிநாதனின், உறுதிக்கு நான் ஆதரவளிக்கின்றேன். என அமெரிக்கத் தூதுவர் கேஷப் குறிப்பிட்டார். உலகளாவிய கண்ணி வெடியகற்றல் முயற்சிகளுக்கான உலகின் பாரிய நன்கொடையாளர் என்ற வகையில், இலங்கையில் நிலக்கண்ணி வெடிப்பிரச்சினைகளை அடையாளம் காண்பதில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணி வெடியகற்றல் பணி குறித்தும் அமைச்சருடன், தூதுவர் கேஷப் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் விக்ரமசிங்க, அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோருடனும், இலங்கை மக்களுடன் இணைந்து எஞ்சியுள்ள கண்ணி வெடி நிறைந்த பகுதிகளை பாதுகாப்பானதாக்குவதற்கு அமெரிக்காவானது தொடர்ந்து பணியாற்றும்.
கடந்த 20 வருடங்களில், இலங்கையின் கண்ணி வெடியகற்றல் முயற்சிகளுக்கான 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்க உதவியானது பாதுகாப்பு மற்றும் கள உபகரணங்கள் நன்கொடை, கண்ணி வெடிகளை கண்டறிதல் மற்றும் நிலத்தை மீளவழங்கல் தொடர்பான ஆய்வுகள், சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கண்ணி வெடியகற்றல் செயற்பாடு என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.
Mine Detection Dog நிகழ்ச்சி உள்ளடங்கலாக இலங்கை இராணுவத்தில் உள்ள கண்ணி வெடியகற்றல் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக இலங்கையின் கண்ணி வெடியகற்றல் ஆற்றலை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது எனவும், இதன்போது அமெரிக்கத் தூதுவர் கேஷப் தெரிவித்துள்ளதான அnமிரக்கத் தூதுவராலயத் வியாழக் கிழமை (08) வெயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment