மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஜெய்க்கா திட்ட பணிப்பாளர் அடங்கிய குழுவொன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வைத்தியசாலையில் இடம் பெற்றுவரும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் வைத்தியசாலையில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் சம்மந்தமான கலந்துரையல் ஒன்றினையும் வியாழக்கிழமை காலை (08) நடாத்தியுள்ளார்.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனுக்கும், ஜெய்க்கா திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் நியோமி மாணி, ஜப்பான் சென்மேரிஸ் வைத்தியசாலையின் ஆய்வுகூடப் பொறுப்பாளர் கிரோகிஜமாசாகி ஆகியோர் அடங்கிய குழுவினருக்கும் இடையிலையே இக் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது வைத்தியசாலையில் எதிர்காலத்தில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படவண்ணம் எவ்வாறான பொறிமுறைகளை கையாள்வது என்பது சம்பந்தமாகவும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக கலந்துரையாடப் பட்டதுடன் பிரதேசத்தில் காணப்படும் எட்டு வைத்திய சாலைகளை ஒன்றிணைத்து ஆய்வுகூட வசதியினை ஏற்படுத்துவது சம்பந்தமாக இதன்போது கலந்துரையடாப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment