(இ.சுதா)
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் ஏற்பாடு செய்த சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வுச் செயலமர்வு 1ம் திகதி வியாழக்கிழமை கல்முனை கிறிஸ்ரா இல்ல பிரதான மண்டபத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்திப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சட்ட உதவி ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.றுஸ்தி வளவாளராகவும் . இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய புலனாய்வு உத்தியோகத்தர்களான திருமதி.நோ.சுதாகரன் திருமதி.பு.சுரேஸ் உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை இஅக்கரைப்பற்று இசம்மாந்துறை இதிருக்கோயில் ஆகிய கல்வி வயயங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பொலிஸ் அதிகாரிகள் இசிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் இசிறுவர் பாதுகாப்பு உரிமைகள் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தில் வழங்கப்படுகின்ற தண்டனைகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment