மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வியாழக் கிழமை (01) இரவு காட்டு யானையிக் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
75 வயதுடைய மூத்ததம்பி சின்னத்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 11.40 மணியளவில் யானைத் தாக்குதலுக்கிலக்காகி உடல் முற்றாக சிதைவடைந்த நிலையில் கை ஒன்று இல்லாத நிலையிலும், பிரேதம் ஒன்று வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பிரேதம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்தில் இப்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி 2 பேர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதோடு, பல வீடுகளும், தோட்டங்களும், சேதமாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment