2 Oct 2015

விஜய்யின் மட்டு ரசிகர்கள் புலி படம் வெளியீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம் பொலிசார் நடவடிக்கை.(வீடியோ)

SHARE
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் வியாழக் கிழமை  (01) விஜய்யின் புலி திரைப்படம் திரையிடப்பட்டதனால் விஜய்யின் ரசிகர்கள் திரையரங்கில் உள்ள விஜய்யின் கட் அவுட் படத்திற்கு பாலால் அபிசேகம் செய்ததுடன் முன்னால் உள்ள பிரதான வீதியில் அதிகளவான பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர்.
இதனால் பிரதான வீதியில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டது இதன்போது இஸ்தலத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து பொலிசாரும் பொது சுகாதார பரிசோதகரும் பிரதான வீதியில் பட்டாசு வெடிக்கச் செய்ததனை நிறுத்தியதுடன் வீதியில் இருந்த பட்டாசு கழிவுகளை விஜய்யின் ரசிகர்களைக் கொண்டு துப்பரவு செய்தனர் அத்துடன் மேலும் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளில் விஜய்யின் ரசிகர்கள் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் எச்சரிக்கை செய்தனர்.

இந்தியாவில்தான் திரைப்பட கலைஞர்களுக்கு பரம ரசிகர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு கோவில் கூட கட்டுகிறார்கள் எனவும் மேலும் தனது கீரோவுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம்.  ஆனால் இப்போது இலங்கையில் நடப்பதென்ன தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய எமது இளைஞர்களும் இப்போது இப்படிப்பட்டவர்களும், இருக்கிறார்கள் என்பதையிட்டு நாம் மிகவும் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். 










SHARE

Author: verified_user

0 Comments: