9 Sept 2015

புரிந்துணர்வு ஒப்பந்தம்

SHARE
தென்கிழக்கு பல்கலைகழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் நிறுவனமும் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் இன்று புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மற்றும் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ரெட்லி ஸ்டபென் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன், முகாமைத்துவ பட்டயக் காணக்காளர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள இவ் ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருக்கும்போதே அவர்களுடைய நிதி மற்றும் கல்வி நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ள முடியும். 

இதனால் இம் மாணவர்கள் பெரும் நன்மையடைந்துள்ளார்கள் எனவும் எதிர்காலத்தில் மேலும் பல வசதிகள் பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கவுள்ளதாகவும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: