9 Sept 2015

மதுபோதையில் கலகம்

SHARE
 மது போதையில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் இன்று புதன்கிழமை மூவாயிரம் ரூபாய் அபராதம்  விதித்துள்ளார். அம்பாறை,
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் குறித்த நபர் மதுபோதையில் கலகம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: