சர்வதேச கரையோர சுத்தம் பேணல் தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த கரையோர பிரதேசங்களை சுத்தம் செய்வது தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எம்.எம்.எம். நாஜிம், கடற்படை அதிகாரிகள், கடல்கள் சூழல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது,கடல்கள் சூழல் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை,இந்த நடவடிக்கையின் பொருட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், கடற்படை வீரர்கள்,பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment