22 Sept 2015

களுவாஞ்சிகுடி கடற்கரை கரையோரத்தை சுத்தப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு

SHARE
கௌரவ ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலக மற்றும், ம.தெ.எ.பற்று பிரதேச செயலகம், ம.தெ.எ.பற்று பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலையம், இராணுவம், பாடசாலை மாணவர்கள், லயன்ஸ் அமைப்பினர்
ஆகியோரின் பங்களிப்புடன் இன்று 22.09.2015 ம.தெ.எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கடற்கரை கரையோரங்களை  சுத்தப்படுத்தும் நிகழ்வானது இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி பொலீஸ் பொறுப்பதிகாரி, ம.தெ.எ.பற்று பிரதேச சபை செயலாளர், இராணுவ அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
















SHARE

Author: verified_user

0 Comments: