தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றும் நிகழ்வொன்று வியாழக்கிழமை (24) மாலை 4.30 மணியளவில் எருவில் மட்.கண்ணகி வித்தியால கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எருவில் கிளைத் தலைவர், சட்டத்தரணி எஸ்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேன், ச.வியாளேந்திரன், உட்பட கிராம பெரியோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொன்னாடைபோர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப் பட்டதோடு எருவில் கிராமத்தில் காணப்படும் வாசிகசாலையில்லாப் பிரச்சனை, வீதிகள் சீரின்மை, வடிகானமைப்பு இன்மை, போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரும்படியும், எருவில் கிராம மக்களால் கோரிக்கை விடுக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment