மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிக் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை மற்றும் மண்டூர் கட்டுப் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதி மக்களை துன்புறுத்தி வந்த காட்டு யானைகளை வியாழக்கிமை மாலை விரட்டி துரத்துப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச வன வள சுற்று வட்டார காரியாலயத்தின் அலுவலர் பி.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தின் பலாச்சோலைக் கிராமத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவரை கடந்த செவ்வாய் கிழமை தாக்கியதில் பாதிக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை மாலை கணேசபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவங்களை அடுத்து, வியாழக்கிழமை மாலை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் போரதீவுப்பற்று பிரதேச சுற்றுவட்டக காரியாலயத்தினர் அப்பகுதி பொதுமக்களுடன் ஒன்றிணைந்து அப்பகுதியின் காட்டுப் பகுதியில் தங்கி நின்ற காட்டு யானைகளையும், பொதுமக்களை தாக்கிவந்த தானியன் யானையினையும் விரட்டி கிராமத்தைவிட்டு வெளியேற்றி கண்ணியம்பைக் காட்டுப் பகுதிக்குள் கொண்டு விடப்பட்டுள்ளன.
கிராமங்களை அண்டிய சிறிய காடுகளுக்குள் நின்ற 5 காட்டு யானைகள் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டதாக போரதீவுப்பற்று பிரதேச வன வள சுற்று வட்டார காரியாலயத்தின் அலுவலர் பி.ஜெகதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment