மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் 42 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள கடற்கரை வீதியின் ஆரம்ப வேலைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) வியாழக்கிழமை மாலை (24) ஆரம்பித்து வைத்தார்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், கிரம உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பங்கு பற்றுதலுடன் இந்த ஆரம்ப நிகழ்வு இடபெற்றது.
பன்நெடுங்காலமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்த இவ் வீதியானது அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி உதவியின் கீழ் சுமார் 42 லெட்சம் ரூபாய் செலவில் 350 மீற்றர் தூரம் கொண்டதாக குறித்த வீதியானது அமைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment