எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருக்கு நல்லாசி வேண்டிய பூஜை வழிபாடும் வரவேற்பு விழாவும் இறுவெட்டு வெளியீடும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் ஆலயத்தலைவர் கீ.கமலமோகனதாசன் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை வரவேற்கும் நிகழ்வானது பிரதேசத்தின் முன்வாயிலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை சென்றடைந்ததன் பின்னர் ஆலயத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருக்கு நல்லாசி வேண்டிய வழிபாடும் இடம்பெற்றது.
கோளாவில் மீனவர் சங்க அமைப்பு, மூத்த பிரஜைகள் அமைப்பு, துர்க்கா கிராமிய பெண்கள் நல்வாழ்வு மன்றம், கோளாவில்-01,02 மாதர் சங்கம், சர்வசக்தி மன்றம் மற்றும் பெண்கள் அரங்கம் ஆகியவற்றின் இணைஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்பு மற்றும் பூஜை வழிபாடுகளின் பின்னர் இராஜமோகனின் விக்னேஸ்வரருக்கான இசைக்காணிக்கை இறுவெட்டும் வெளியீடு செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment