சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் இன்று புதன்கிழமை காலை கொடி விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணிக்கும்
கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துரைரெட்ணசிங்கத்துக்கும் திருகோணமலை சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் சிரோமன் கொடிகளை அணிவித்தார். இதன் மூலம் சேகரிக்கப்படும் பணம் சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தப்படவுள்ளமை குறிப்படத்தக்கது
0 Comments:
Post a Comment