9 Sept 2015

மகனை குத்திக்கொலை: தந்தை தற்கொலை ; குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

SHARE
தந்தையொருவர் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று, வவுணதீவு, கண்ணங்குடா பரித்திச்சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாமோதிரம் மகேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு தனது எட்டு வயதான ரி.வினோத் எனும் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து குறித்த நபரின் மனைவி மகேந்திரன் குணலட்சுமி தனது நான்கு மாதக் குழந்தையுடன் தனது வீட்டிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். அயலவர்கள் தாயையும் குழந்தையையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: