மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபைக்குச் சொந்தமாக தீயணைப்புப்படை இருக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளதாக நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் இன்று புதன்கிழமை தெரிவித்தார். கடந்த மாதம் ஏறாவூர் வாவிக்கரையோரமாகவுள்ள குப்பைக்கிடங்கு இரவில் இனந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டபோது, அத்தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர பல நாட்கள் சென்றன.
எம்மிடமுள்ள குறைந்தபட்ச வளங்களை பயன்படுத்தியே அத்தீயை அணைக்க முடிந்தது. இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஏறாவூர் நகரசபை தன்வசம் தீயணைப்புப்படையை கொண்டிருக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்; அவர் கூறினார்.
மேற்படி நகரசபைக்கான தீயணைப்புப்படையின் அவசியம் கருதிய வேண்டுகோள் பற்றி பரிசீலித்து, அதனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment